ஓயாத அலையில் உயிரிழந்தோருக்கு இராணுவத்தினர் அஞ்சலி!
1996ம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையின் போது உயிரிழந்த 1169 படையினருக்கு ராணுவத்தினர் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் 400க்கும் அதிகமான போராளிகள் உயிரிழந்தனர்.
1996ஆம் ஆண்டு ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது உயிரிழந்த ராணுவ வீரர் ஒருவரது மகன் ராணுவ அதிகாரியாக நினைவிடத்திற்கு வந்து உயிர் நீத்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதில் உயிரிழந்த 1169 படையினர் நினைவாக முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைக்கப்பட்ட படையினரின் நினைவுத்தூபியில் 25ம் ஆண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது.