தொற்றாளர்களால் நிரப்பிய வைத்தியசாலைகள்!
இப்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால் அரச வைத்தியசாலைகள் சிலவற்றில் இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசியவைத்தியசாலை மற்றும் களுபோவில வைத்தியசாலை உட்பட நாட்டில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் இந்தநிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
கொழும்பு தேசியவைத்தியசாலையில் இப்பொழுது சுமார் 600 பேருக்கு அதிகமானோர் சிகிச்சைபெற்று வருவதாக இலங்கை வைத்தியஅதிகாரிகள் சங்க உபதலைவர் தெரிவித்துள்ளார்.