நிந்தவூர் அரபு மத்ரஸா அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்!

கடந்த செவ்வாய்க்கிழமை (26) நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மதரஸா முடிந்ததும் இந்த மாணவர்களுக்கு வீட்டுக்குச் செல்ல பேருந்து இல்லாத காரணத்தினால் அம்மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் நிர்வாகம் மந்தப் போக்குடன் நடந்துகொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இவ்வாறானதொரு பின்னணியில் 11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிர் பிழைத்த நிலையில், மேலும் 6 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

12 – 16 வயதுக்குட்பட்ட 6 மாணவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், இதுவரை 5 மாணவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று உழவு இயந்திர சாரதி, மற்றுமொருவர் என இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இருள் சூழ்ந்த நிலை மற்றும் அதிகமான காற்று காரணமாக காணாமல்போன மாணவனை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் நாளை சனிக்கிழமை (30) காலை மீட்புப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக,அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரஸா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மதரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 பேரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.