28.3 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பீப்பிள் ஆக்சன் கட்சி!

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பீப்பிள் ஆக்சன் கட்சி!

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி 93 இடங்களில் 83 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகின்றது.

இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்த நிலையில் சிங்கப்பூரில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது.

இதேவேளை,கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 880ல் இருந்து 1100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வாக்காளர்களுக்கு வாக்கு சாவடியில் முகக்கவசமும் கையுறைகளும் வழங்கப்பட்டு,மக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றிவாறு பாதுகாப்பான முறையில் வாக்களித்துள்ளனர்.

Progress in Singapore - WSJ

இதன்போது ஆளும் ‘பீப்பிள் ஆக் ஷன்’ கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.இக்கட்சி, 61.24 சதவீத வாக்கு விகிதத்தினை பெற்றுள்ளது. இது கடந்த 2015ல் பெற்ற வாக்கு விகிதத்தை (69.9%) விட குறைவானதாகும்.

இதேவேளை,எதிர்கட்சியான ‘வொர்க்கர்ஸ் பார்ட்டி’ கட்சி, 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன்,அக்கட்சியின் பிரித்தம் சிங் பார்லி எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments