28.8 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Sports Outdoor டோனி ஓய்வு பெற்றாலும் CSK-யில் அவருக்கு காத்திருக்கும் பதவி!

டோனி ஓய்வு பெற்றாலும் CSK-யில் அவருக்கு காத்திருக்கும் பதவி!

டோனி அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும்,அவர் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பாஸ் ஆக இருப்பார் என்று அந்தணியின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்

இந்திய அணிக்காக மூன்று வித கோப்பைகளை வாங்கிக் கொடுத்த டோனி,ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் கோப்பைகளை வாங்கி குவித்தவர்.

தற்போது 39 வயதாகும் டோனி அவர் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் ஒரு வீரராக அணியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்றே கூறப்படுகிறது.

ஆனாலும் இன்றுவரை சென்னை அணி கேப்டன் என்றால் டோனியை தவிர வேறு யாரையும் அந்த இடத்தில் வைத்து பார்க்க கூட விரும்பவில்லை.

இந்நிலையில் இன்னும் 10 வருடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டோனியின் நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,இன்னும் 10 வருடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டோனி தான் பாஸ் ஆக இருப்பார்.

இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது.

அணி வீரர்களிடம் எப்படி சிறப்பான ஆட்டத்தை வாங்குவது என்பதை அவர் அறிந்தவர். அதேபோல் அடுத்த தலைமுறை வீரர்களை எப்படி அணிக்கும் கொண்டு வருவதே என்பதையும் அவர் அறிந்தவர் இதனால் அவர் எப்போதும் அணியில் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments