28.4 C
Jaffna
Saturday, October 24, 2020
Home Education அனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை!

அனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை!

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சருக்கும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம் அரசாங்க பாடசாலைகளின் மேலதிக விடுமுறை தீர்மானத்தை தனியார், சர்வதேச பாடசாலைகளும்,மேலதிக வகுப்புக்களும் பின்பற்றும் என கல்வியமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அஞ்சல் மூல வாக்களிப்பு மத்திய நிலையங்களாக ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலைகள் மாத்திரம் குறித்த தினங்களில் திறக்கப்படுவதுடன்,அங்கு வாக்களிப்பு பணிகள் இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அந்ததந்த பாடசாலைகளின் அதிபர்களின் பொறுப்பாகும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை,அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அமைவாக சகல கத்தோலிக்க தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 17 திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க கல்வி பணிப்பாளர் மற்றும் தனியார் பாடசாலைகளின் முகாமையாளர் அருட்தந்தை ஐவன் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை,சகல பல்கலைகழங்கள் தொடர்பிலும் பல்கலைகழங்கள் மானியங்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடி ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ள தகவல் இன்று வெளிவந்துள்ளது. அவரது வருமான வரி செலுத்தும் முறைமையூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆட்சி அமைத்த காலத்திலிருந்து சீனாவுக்கு...

Bank account for Trump in China !!!

US President Donald Trump has a bank account in China released today. According to international reports, the matter came to light through his income tax...

Three jailed in Batticaloa!

Three persons involved in child abuse have been sentenced to life imprisonment in Batticaloa today. Judge M.Y.M.Issadeen has sentenced a man (64) to 09 years...

மட்டக்களப்பில் மூவருக்கு கடூழிய சிறை!

இன்று மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மட்டக்களப்பு, பனிக்கையடி பிரதேசத்தில் 06 வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு(வயது 64) 09 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு...

Recent Comments