28.3 C
Jaffna
Sunday, September 20, 2020
Home News சீன விஞ்ஞானி தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

சீன விஞ்ஞானி தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே தடுமாறி வருகிறது.கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் கணிசமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அமெரிக்கா,பிரேசில்,இந்தியா ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.உலக அளவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,107,962 ஆக உள்ள நிலையில்,உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 572,831 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோன பற்றிய தகவல்கள் முன்னரே சீன அரசுக்குத் தெரியும் என சீனாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹாங்காங்கில் இருக்கும் வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்ற லி மெங் யான் என்ற பெண் விஞ்ஞானி நேற்று பாக்ஸ் நியூஸூக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள லி மெங் யான் இருக்கும் இடத்தைப் பற்றி குறிப்பிடாமல் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் பற்றி சீன அதிகாரிகளுக்குத் தெரியும்.கொரோனா தொடர்பாக உலகத்துக்கும் உலக சுகாதார நிறுவனத்துக்கும் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை சீனாவுக்கு இருந்தது.

அப்போதே வைரஸ் பரவலில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.வைரஸ் தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி செய்ய ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு அனுமதியளிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது.

உலக சுகாதார அமைப்புடன் இணைந்திருக்கும் தனது சொந்த நிறுவனம்,கொரோனா பற்றி மவுனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டதாக டாக்டர் யான் கூறினார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்து ஏப்ரல் 28-ம்தேதி கேத்தே பசிபிக் விமானம் மூலம் அமெரிக்கா வந்தடைந்தேன்.

கொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்

சீன அரசிடம் நான் பிடிபட்டால் மிகவும் மோசமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன் அல்லது பிறரைப் போலவே நானும் காணாமல் போயிருப்பேன்.

சீனாவின் முக்கிய ஆராய்ச்சி மையத்தில் வேலைப்பார்த்த என்னுடைய தோழி கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய் என்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார்.சீனா இதை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு டிசம்பர் 31-ந்தேதியே கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்தார்.

கொரோனா தொடர்பான செய்தியை உலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமெரிக்கா வந்தேன்”இவ்வாறு லி மெங் தெரிவித்துள்ளார்.

உலக சுகதார மையத்தின் நிபுணர்கள் குழு கொரோன நோய் தொற்றின் அறிமுகம் குறித்து கண்டறிய சீனா சென்றுள்ள நிலையில்,இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments