28.2 C
Jaffna
Saturday, September 19, 2020
Home Sports Outdoor உண்மையை ஏற்றுக்கொண்ட கவுதம் கம்பிர்!

உண்மையை ஏற்றுக்கொண்ட கவுதம் கம்பிர்!

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட டோனிதான் சிறந்த கேப்டன் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது.அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ் இந்தியாவின் சிறந்த கேப்டனாக கருதப்படுகிறார்.

1996-க்குப்பிறகு இந்திய அணி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியபோது,கங்குலி 2000-த்தில் கேப்டனாக பொறுப்பேற்றார்.அணியில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்தார். சேவாக்கை தொடக்க வீரராக களம் இறக்கினார்.ஜாகீர் கான்,யுவராஜ் சிங்,கைப், எம்எஸ் டோனி,ஹர்பஜன் சிங் போன்ற இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து உத்வேகம் கொடுத்தார்.

இவரது தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி எண்ணிக்கையை அதிகரித்தது.அதன்பின் எம்எஸ் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார்.இவரது தலைமையில் இந்தியா டி20,50 உலக கோப்பைகள் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி எனக் கைப்பற்றியது.

இதனால் எம்எஸ் டோனி சாதனைக் கேப்டனாக கருதப்படுகிறார்.என்றாலும் கங்குலி சிறந்த கேப்டனா? எம்எஸ் டேனி சிறந்த கேப்டனா? என்ற விவாதம் இன்னும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

கவுதம் கம்பிர்,இர்பான் பதான்,குமார் சங்ககரா,கிரேம் ஸ்மித் யார் சிறந்த கேப்டன் என்று விவாதித்தனர்.அப்போது கங்குலியை விட எம்எஸ் டோனிதான் சிறந்த கேப்டன் என்று கம்பிர் தெரிவித்தார்.

இதுகுறித்து கம்பிர் கூறுகையில் ‘‘ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட எம்எஸ் டோனி சிறந்த கேப்டன்.குறிப்பாக நீங்கள் சாம்பியன் பட்டத்தை வென்றது குறித்து குறிப்பிடும்போது.ஐசிசி-யின் டி20 உலக கோப்பை,50 ஓவர் உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளார்.ஐசிசி டிராபியை வெல்ல அவருக்கு வேறு ஏதும் இல்லை.

ஒரு கேப்டனாக இதைவிட சிறந்த சாதனைகள் வைக்க முடியாது.ஆகவே,ஒயிட்-பால் கிரிக்கெட்டில் கங்குலியை விட எம்எஸ் டோனி உயர்ந்தவர்’’ என்றார்.

கங்குலியை விட டோனிதான் சிறந்த கேப்டன்: முதன்முறையாக ஒப்புக்கொண்ட கவுதம் கம்பிர்

மேலும், ‘‘கங்குலி கேப்டன் பதவியை ஏற்குமபோது சேவாக்,யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங்,ஜாகீர் கான்,ஆஷிஷ் நெஹ்ரா,கைஃப் போன்ற அனுபவமிக்க வீரர்கள் கொண்ட அணியாக இருந்தது.

எம்எஸ் டோனி கேப்டன் பதவியை ஏற்கும்போது இந்த வீரர்கள் தலைசிறந்த வீரர்களாக ஜொலித்தனர்.இதுதான் காரணம்.நெருக்கடியை எப்படி கையாள வேண்டும் என்று இவர்களை டோனி மாற்றவில்லை.

ஆனால்,சவுரவ் கங்குலியின் மூலம் அனுபவமிக்க வீரர்களாக உருவெடுத்தவர்களால் டோனி உயர்ந்தவராக மதிப்பிடப்படுகிறார்.

நீங்கள் 2002 சாம்பியன்ஸ் டிராபி குறித்து பேசும்போது, இலங்கையுடன் இந்தியா சேர்ந்து கோப்பையை வாங்கியது.இந்திய அணிக்குதான் அப்போது வாய்ப்பு அதிகமாக இருந்தது.போட்டி முழுவதுமாக நடந்திருந்தால் இந்தியா தனியாக கோப்பையை வென்றிருக்கும்.அப்போது கங்குலிதான் கேப்டன்.

அப்படி பார்க்கும்போது டோனியும், எம்எஸ் டோனியும் சமமாகத்தான் இருந்திருக்கனும்.2003 உலக  கோப்பையை பற்றி பேசினால்,இந்திய அணி அபாரமாக விளையாடியது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் கங்குலி தலைமையில் கோப்பையை வென்றிருப்போம்.அதனால் எம்எஸ் டோனிக்கும்,கங்குலிக்கும் இடையில் டிராபியை ஒப்பிட்டுள்ளால் ஒரேயொரு போட்டி மட்டுமே’’ என்றார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments