28.2 C
Jaffna
Tuesday, September 8, 2020
Home Lifestyle Home Garden நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்!

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்!

இந்த நாவல்பழம் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது,அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.இவற்றின் பழம்,விதை, இலை,பட்டை என்று அனைத்துமே சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம் தினமும் உட்கொண்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும்.நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

 • உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டி-ஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி,அரிப்பு போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தும்.
 • நாவல் மரப்பட்டையைத் தூள் செய்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வாய்க் கொப்புளிப்பதால் வாயில் ஏற்பட்ட புண்கள்,பல் சொத்தை,ஈறுகளின் வீக்கம் ஆகியன குணமாகும்.இதே நீரைக் கொண்டு புண்களைக் கழுவுவதால் விரைவில் புண்கள் ஆறும்.
 • நாவல்பழம் அதிகம் கால்சியம் உள்ளது தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டால் எலும்பு பலமாக இருக்கும்.
 • அடிக்கடி நாவல் பழத்தை உண்ணுவதால் நுரையீரல் தூண்டப்பட்டு சீராக செயல்படும்.சிறுநீர்ப்பை கோளாறுகளும் நீங்கும்.
 • மலச்சிக்கல் பிரச்சனையா? அப்படியானால் நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரிசமமாக நீரில் கலந்து கொண்டு,தினமும் இரண்டு முறை குடியுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழத்தினை உட்கொள்ளுங்கள்.மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகும்.
 • நீரிழிவு நோயாளிகள்,நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும்.
 • பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக,வைட்டமின் ஈ தேவை.நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.
 • நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும்.அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு,  அந்நீரை பருக வேண்டும்.
 • நாவல் பழச்சாறு ஒரு தேக்கரண்டி,தேன் மற்றும் நெல்லிச்சாறு இவை இரண்டையும் சம அளவாகச் சேர்த்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடல் சோர்வு போகும்.ரத்தசோகை குணமாகும்,ஞாபக சக்தி அதிகரிக்கும்.
 • நாவல் பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால்,இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து,மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.
 • சர்க்கரை நோயாளிகள் இதன் விதைகளை நிழலில் உலர்த்தி சுமார் ஒரு கிராம் அளவு காலை – மாலை என சாப்பிட்டு வந்தால் படிப்படியாக சர்க்கரை நோய்  குறையும்.
 • அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள்,நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிட அசிடிட்டி பிரச்சனை உடனே சரியாகும்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments