28.3 C
Jaffna
Sunday, September 20, 2020
Home News அமெரிக்காவில் நேற்று, இன்று, நாளை என தொடரும் சோகம்!

அமெரிக்காவில் நேற்று, இன்று, நாளை என தொடரும் சோகம்!

அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான மேலும் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நியூ மெக்ஸிகோவில் உள்ள ஹோலோமன் விமானப்படை தளத்தில் 49 ஆவது பிரிவைச் சேர்ந்த ‘F-16C Viper’ என்ற போர் விமானமே தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது குறித்த விமானி வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்,சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறித்த விமானப்படைதள அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ் செய்திச் சேவையின் தகவல்படி,இந்த ஆண்டின் மே மாதத்திலிருந்து அமெரிக்காவில் இடம்பெற்ற ஐந்தாவது ஜெட் விமான விபத்து இதுவாகும்.

முன்னதாக ஜூன் மாதத்தில் தென் கரோலினாவில் இதுபோன்ற F-16C ரக போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments