28.8 C
Jaffna
Wednesday, September 23, 2020
Home Cinema சினிமா தொடர்புடையவர்கள் என்னுடைய விஷயத்தில் தலையிட வேண்டாம்!

சினிமா தொடர்புடையவர்கள் என்னுடைய விஷயத்தில் தலையிட வேண்டாம்!

செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா,அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27-ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன்,பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகாரளித்திருந்தார்.

இந்நிலையில்,நடிகை வனிதா,சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்திருந்தார்.தற்போது மீண்டும் சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னைப் பற்றி சூர்யா தேவி என்பவர் யூடியூப் சேனலில் ஆபாசமாகவும் தவறாகவும் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.பணம் சம்பாதிக்க இது போல செய்து வருகிறார்.போரூர் போலீசில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தேன்.சூர்யா தேவி மற்றும் படத்தயாரிப்பாளர் ரவீந்திரன் சேர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

ரவிந்திரன் - சூர்யா தேவி

இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சினிமா தொடர்புடையவர்கள் என்னுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள்.ஆதரவு இல்லாத பெண்களை குறிவைத்து அந்த 2 பேரும் அவதூறு பரப்புகிறார்கள்.இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்றார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments