27.4 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Lifestyle Food எளிய முறையில் நெய் செய்முறை!

எளிய முறையில் நெய் செய்முறை!

மனிதனுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் தன்மை நெய்க்கு உள்ளது. மேலும் பலவகையான மருத்துவ குணங்களை கொண்டது இந்த நெய்.சரி வீட்டில் நெய் செய்முறை பற்றி இப்போது காண்போம்.

தேவைப்படும் பொருட்கள் :

  • பால் ஆடை – 10 அல்லது 20 நாட்கள் சேர்த்து கொள்ளவும்.
  • உறை மோர் – சிறிதளவு
  • ஐஸ் க்யூப் – 10
  • முருங்கை கீரை – ஒரு கொத்து

செய்முறை:

  • நெய் செய்முறை பொறுத்தவரை நாம் தினமும் பால் காய்ச்சும் பொழுது, அதில்படியும் ஆடையை ஒரு டப்பாவில் போட்டு 10 அல்லது 20 நாட்கள் ஃபிரிட்ஜியில் சேர்த்து வரவும்.
  • ஓவ்வொரு நாளும் ஆடையை சேர்த்து தினமும் பாட்டிலில் போட்டு சேர்த்து வரவும்.
  • ஒரளவு பாலாடை சேர்ந்த பிறகு,அந்த பாலாடையில் கொஞ்சம் உறை மோரை ஊற்றி 5 மணி நேரம் வெளியே வைத்து உறைய வைக்க வேண்டும்.
  • 5 மணி நேரம் முடிந்த பின்பு மீண்டும் ஃபிரிட்ஜியில் குளிர வைக்க வேண்டும்.
  • குளிர்ந்தவுடன் வெளியே எடுத்து ஐஸ்க்யூப் சேர்த்து மிக்ஸியில் ஐந்து நிமிடம் அடிக்க வேண்டும்.
  • இவ்வாறு மிக்ஸியில் அடித்தால் வெண்ணை தனியாக திரண்டு வரும் அதில் கிடைக்கும் மோர் கசக்காமல் இருந்தால் மோர் குழம்பு வைக்க பயன்படுத்தலாம்.
  • மிக்ஸியில் அடித்து தனியாக எடுத்த வெண்ணெயை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி எடுக்க வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் கழுவி எடுத்த வெண்ணெயை போட்டு உருக்க வேண்டும்.
  • வெண்ணெய் உருகி வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
  • வெண்ணெய் உருகி நெய் பதம் வந்ததும் ஒரு கொத்து முருங்கை கீரையை போடவும்.முருங்கை கீரை பொறிந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும்.
  • ஆறியவுடன் ஒரு பாட்டிலில் அந்த நெய்யை வடிகட்டி வைக்கவும்.அதன் பிறகு இரண்டு நாள் கழித்து லேசாக உறைய ஆரம்பிக்கும்.
  • இந்த நெய் எலுமிச்சை நிறத்தில் பார்க்க அழகாகவும் மிகவும் மணமாகவும் இருக்கும்.
  • மிக சுவையாக வீட்டிலேயே தயாரிக்ககூடிய சுத்தமான நெய் ரெடி.இந்த நெய்யை குழந்தைகளுக்கு சாதத்தில் விட்டு பிசைந்தும்,பருப்புடனும்,முட்டை பொரிக்கவும், பாயாசம்,ஸ்வீட் என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments