28.7 C
Jaffna
Friday, September 18, 2020
Home News இந்தியாவை பின்பற்ற வேண்டும் - அமெரிக்க வலியுறுத்தல்!

இந்தியாவை பின்பற்ற வேண்டும் – அமெரிக்க வலியுறுத்தல்!

இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகளை தடை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு 25 எம்.பி.க்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

அமெரிக்காவின் 25 எம்.பி.க்கள் அதிபர் டிரம்புக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

அதிநவீன உளவு பார்க்கும் கருவியாக டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை சீனா பயன்படுத்தி வருகிறது.இந்த செயலிகளின் மூலம் அமெரிக்கர்களின் தகவல்கள் எளிதாக திருடப்பட வாய்ப்புள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 60 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இதனை உதாரணமாகக் கொண்டு அமெரிக்க அரசும் செயல்பட வேண்டும்.அமெரிக்க மக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கையை அதிபர் எடுக்க வேண்டும்.

அமெரிக்கர்களின் தரவு,தனியுரிமை அல்லது பாதுகாப்பைப் பாதுகாக்க டிக்டாக் அல்லது சீனாடன் இணைந்த சமூக ஊடக வலைத்தளங்கள் அல்லது பயன்பாடுகளை அமெரிக்கா நம்பக்கூடாது.நமது நாட்டிற்கு எதிரான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிநவீன உளவு பிரச்சாரத்தை நிறுத்தவும்,நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கவும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments