28 C
Jaffna
Friday, September 18, 2020
Home Cinema விஜய்சேதுபதியின் புதிய வேண்டுகோள்!

விஜய்சேதுபதியின் புதிய வேண்டுகோள்!

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்யுமாறு நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.அதே நேரம் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகமாகி இருப்பது நிம்மதி அளிக்கிறது.

தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தை தானமாக பெற்று அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கபடுவோருக்கு அதிக அளவில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் ரத்த தானம் செய்யும்படி வற்புறுத்தப்படுகிறது.

இதற்கான விழிப்புணர்வு பணியில் நடிகர் விஜய் சேதுபதியும் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

“கருணையும் பச்சாதாபமும் இந்த நேரத்தில் அவசியமாக உள்ளது.எனவே கொரோனாவில் இருந்து குணமடைந்தவராக இருந்தால் தயவு செய்து பிளாஸ்மா தானம் செய்து கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு உதவி செய்யுங்கள்.இதன்மூலம் ஒரு குடும்பத்தின் உயிரை உங்களால் காப்பாற்றலாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments