28 C
Jaffna
Friday, September 25, 2020
Home News இங்கிலாந்தை மிரட்டிய ரஷ்யா!

இங்கிலாந்தை மிரட்டிய ரஷ்யா!

கொரோனா தடுப்பு மருந்து தகவல் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இங்கிலாந்தும் முன்னிலை வகிக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக அந்நாட்டு அறிவித்து இருந்தது.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துதான் முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில்,ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி தொடர்பான அறிவுசார் தகவல்களை திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றச்சாட்டியுள்ளது.

இதற்கிடையில்,கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து பொதுத்தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – அமெரிக்கா இடையேயான ரகசிய வியாபார தகவல்களை திருடி இணைய தளத்தில் வெளியிட்டு அதன் மூலம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை ரஷ்யா செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தலில் தலையீடு,கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி தகவல் திருட முயற்சி என இங்கிலாந்து தெரிவித்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.

Coronavirus in Russia: The Latest News | July 17 - The Moscow Times

மேலும்,இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது எனவும்,நட்பற்ற செயல்பாடுகளை ரஷ்யா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது எனவும்,தகுந்த பதிலடி தருவதே வழக்கம் எனவும் ரஷ்யா மிரட்டல் விடுத்து உள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments