28.7 C
Jaffna
Friday, September 18, 2020
Home News சீன கம்யூனிஸ்டு கட்சிகள் அமெரிக்காவில் நுழைய தடை!

சீன கம்யூனிஸ்டு கட்சிகள் அமெரிக்காவில் நுழைய தடை!

சீனாவும்,அமெரிக்காவும் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளில் மோதி வருகின்றன.சமீபத்தில் கூட கொரோனா தொற்று,ஹாங்காங் மீதான நெருக்கடி போன்ற நடவடிக்கைகளால் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் மாறி மாறி பல்வேறு பதிலடிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க டிரம்ப் அரசு திட்டமிட்டு உள்ளது.இதற்காக வரைவு மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது.இந்த மசோதாப்படி சீன கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் புதிதாக நுழைய தடை விதிப்பதுடன், ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் உறுப்பினர்களும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.

இந்த மசோதா அமலுக்கு வந்தால் சீனா-அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.எனினும் இந்த திட்டம் தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments