28.5 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Sports Outdoor இந்திய அணி வெற்றி பெற 3மாத பயிற்சி தேவை!

இந்திய அணி வெற்றி பெற 3மாத பயிற்சி தேவை!

மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்து சில ரஞ்சி போட்டிகளில் விளையாடினால்,இந்திய அணிக்காக விளையாடக்கூடிய தகுதியை பெற்றுவிடுவேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,இடது கை பேட்ஸ்மேனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி ஓய்வு பெற்ற கடைசிக்கால கிரிக்கெட் குறித்து பெங்கால் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.

அப்போது பிசிசிஐ தலைவர் கங்குலி கூறும்போது ‘‘எனக்கு இன்னும் இரண்டு தொடர்கள் ஒருநாள் போட்டியில் கூடுதலாக கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் அதிகமான ரன்கள் அடித்திருப்பேன்.நாக்பூர் போட்டியில் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால்,அடுத்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் அதிக ரன்கள் அடித்திருப்பேன்.

உண்மையிலேயே,தற்போது எனக்கு ஆறு மாதம் பயிற்சி கொடுக்கப்பட்டால்,அதன்பின் மூன்று ரஞ்சி போட்டிகளில் விளையாடி,டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக என்னால் ரன்கள் அடிக்க முடியும்.ஆறுமாதம் கூட வேண்டாம்.மூன்று மாதங்கள் கொடுத்தால் போதும்.அப்போது கூட ரன்கள் அடிக்க முடியும்.

நீங்கள் வாய்ப்புகள் கொடுக்காமல் போகலாம், ஆனால் எனக்குள் இருக்கும் நம்பிக்கையை எப்படி உடைக்க முடியும்?’’ என்றார்.மேலும் 2007-08 சிறப்பாக ரன்கள் அடித்த போதிலும் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு ‘‘அதை என்னால் நம்பமுடியவில்லை.

அந்த வருடத்தில் நான் அதிக ரன்கள் அடித்தவர்களில் ஒருவராக திகழ்ந்த போதிலும்  நீக்கப்பட்டேன். நன்றாக விளையாடிய போதிலும் நீக்கப்பட்டால்,அப்புறம் எப்படி நிரூபிப்பது,யாரிடம் நிரூபிப்பது,என்ற விஷயம் எனக்கும் நிகழ்ந்து கொண்டே இருந்தது’’ என்றார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments