28.1 C
Jaffna
Sunday, September 13, 2020
Home News Europe அமைதியாக இராணுவ வீரர்களை குவித்து இந்தியாவை குறித்த வைத்த சீனா!

அமைதியாக இராணுவ வீரர்களை குவித்து இந்தியாவை குறித்த வைத்த சீனா!

இந்தியா எல்லை அருகே சீனா கடந்த ஏப்ரல் மாதத்திலே தனது இராணுவப்படைகளை அமைதியாக குவித்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், பிரச்சினையை தீர்ப்பதற்காக இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில்,ஜூலை 14-ஆம் திகதியன்று லடாக்கில் சுஷுல் என்ற இடத்தில் இந்திய,சீன இராணுவ தளபதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,முக்கிய இடங்களில் சீன இராணுவம் பின்வாங்க ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

கல்வான் பள்ளத்தாக்கில்,தங்களது படைகளை விலக்கிக்கொள்ள இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதைத்தொடர்ந்து,படிப்படியாக எல்லைப் பகுதியில் இராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் விலக்கிக்கொள்ள இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மே மாதத்தின் முதல் வாரத்தில் கிழக்கு லடாக் அருகே எல்லைப் பகுதியில் சீனா தனது இராணுவப் படையை குவித்ததால்தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை துவங்கியது

இந்நிலையில்,ஏப்ரல் மாதத்திலேயே எல்லைப் பகுதியில் சீனா தனது இராணுவத்தை அமைதியாக குவித்து வந்துள்ளது.

அதாவது,இராணுவப் பயிற்சி என்ற பெயரில் ஏப்ரல் மாதத்திலேயே கிழக்கு லடாக் எல்லையில் சீனா தனது இராணுவப் படையை குவிக்கத் தொடங்கியுள்ளது.

ஜூலை 14 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது,தெப்சங்,டிபிஓ ஆகிய பகுதிகளில் சீனாவின் இராணுவப் பயிற்சி வேடம் பற்றி சீன அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இரண்டு பகுதிகளில் சீனா தனது படையை ஏராளமாக குவித்து வைத்துள்ளது.

ஒன்று,கிழக்கு லடாக்கில் இந்திய எல்லை அருகே சீனா சுமார் 20,000 இராணுவ வீரர்களை குவித்துள்ளது.அதேபோல,சீனா எல்லைக்குள் வடக்கு ஷிஞ்சியாங் பகுதியில் சுமார் 10,000 வீரர்களை குவித்து வைத்துள்ளது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா சுமார் 35,000 வீரர்களை குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments