27 C
Jaffna
Thursday, October 29, 2020
Home Lifestyle Disease Food Poison-ஆல் அவஸ்தையா? இதோ அதற்கான தீர்வு!

Food Poison-ஆல் அவஸ்தையா? இதோ அதற்கான தீர்வு!

சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல்,சமைத்த உணவை சரியாகப் பதப்படுத்தாமல் இருத்தல்,உண்ணும் தட்டை நன்றாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் Food Poison ஏற்படுகிறது.

இன்னும் சில சமயங்களில் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகாத உணவுப் பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதன் மூலமும் ஏற்படுகிறது.

  • துளசி இலைகளை அரைத்து ஜூஸ் எடுத்து, தேன் சேர்த்து தினமும் குடித்து வாருங்கள்.
  • 1 கப் நீரில் 1 டீஸ்பூன் துருவிய இஞ்சியைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி,தேன் கலந்து குடிக்க வேண்டும்.
  • 1 டீஸ்பூன் வெந்தயத்தை 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் சேர்த்து அப்படியே உட்கொள்ளுங்கள்.இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில்,1 சிட்டிகை சர்க்கரை சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும்.
  • 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் சுடுநீரில் சேர்த்து கலந்து, உணவு உண்பதற்கு முன் குடியுங்கள்.இல்லாவிட்டால்,2-3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே உட்கொள்ளுங்கள்.
  • 4 கப் நீரில் சில துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து கலந்து,அந்நீரை நாள் முழுவதும் மெதுவாக குடித்து வந்தால்,அது ஃபுட் பாய்சனால் ஏற்படும் வயிற்று வலி மற்றும் இதர பிரச்சனைகளைத் தடுக்கும்.
  • கொதிக்கும் நீரில் சிறிது சீரகம்,உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி,ஒரு நாளைக்கு 2-3 முறை குடியுங்கள்.
  • 3 டேபிள் ஸ்பூன் தயிரில்,1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுங்கள்.அதுவும் ஒரு நாளைக்கு 3-4 முறை இப்படி சாப்பிட்டால்,ஃபுட் பாய்சன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு,பின் நீரைக் குடியுங்கள்.ஒருவேளை உங்களால் பூண்டின் நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாவிட்டால்,பூண்டினை சாறு எடுத்து குடியுங்கள்.
  • ஒருநாளைக்கு மூன்று முறை ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட வயிற்று பிரச்சனைகள் நீங்கும்.அதோடு வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தைக் கட்டுப்படுத்தும்.
  • பூண்டு எண்ணெய் மற்றும் சோயா பீன்ஸ் எண்ணெயை ஒன்றாக கலந்து,அந்த எண்ணெய் கலவையை உணவு உட்கொண்ட பின் வயிற்றுப் பகுதியில் தடவுங்கள்.
  • ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி,அத்துடன் 1 டீஸ்பூன் கொத்தமல்லி ஜூஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.

Most Popular

ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ள தகவல் இன்று வெளிவந்துள்ளது. அவரது வருமான வரி செலுத்தும் முறைமையூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆட்சி அமைத்த காலத்திலிருந்து சீனாவுக்கு...

Bank account for Trump in China !!!

US President Donald Trump has a bank account in China released today. According to international reports, the matter came to light through his income tax...

Three jailed in Batticaloa!

Three persons involved in child abuse have been sentenced to life imprisonment in Batticaloa today. Judge M.Y.M.Issadeen has sentenced a man (64) to 09 years...

மட்டக்களப்பில் மூவருக்கு கடூழிய சிறை!

இன்று மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மட்டக்களப்பு, பனிக்கையடி பிரதேசத்தில் 06 வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு(வயது 64) 09 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு...

Recent Comments