28.8 C
Jaffna
Monday, September 21, 2020
Home Cinema இந்திய அளவில் முதலிடம் பிடித்த விஜய்!

இந்திய அளவில் முதலிடம் பிடித்த விஜய்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்,பாலிவுட், டோலிவுட் பிரபலங்களை ஓரங்கட்டி முதலிடம் பிடித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டது.சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது.

ஊரடங்கு சமயத்தில் மக்கள் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சிகள் மற்றும் ஓடிடி தளங்களை பார்த்து வந்தனர்.இதனால் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

இதன் காரணமாக அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் மக்களை கவர்வதற்காக முன்னணி நடிகர்களின் ஹிட்டான படங்களை ஒளிபரப்பி வந்தன.அந்த வகையில் இந்த ஊரடங்கு சமயத்தில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களில்,அதிக பார்வையாளர்களை பெற்ற இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் 117.9 மில்லியன் பார்வையாளர்களுடன் விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.76.2 மில்லியன் பார்வையாளர்களுடன் லாரன்ஸ் 2-ம் இடமும்,65.8 மில்லியன் பார்வையாளர்களுடன் ரஜினி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.அக்ஷய் குமார்,பிரபாஸ் ஆகியோர் முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர்.

இந்த விவரங்கள் அனைத்தும் ஊரடங்கு போடப்பட்ட 13 வது வாரம் முதல் 27 வது வாரம் வரையிலான விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments