27 C
Jaffna
Thursday, October 29, 2020
Home Lifestyle Home Garden வெண்டைக்காயின் மகத்தான மருத்துவ பயன்கள்!

வெண்டைக்காயின் மகத்தான மருத்துவ பயன்கள்!

வெண்டைக்காயில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருள் இருக்கின்றன.இதய துடிப்பை சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் உள்ளது.100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 களாக உள்ளன.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான்.இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகிறது.நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றது.

சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும்.நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது.

ஏன் என்றால்,அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

இந்த வெண்டைக்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கு நன்மை புரிகிறது.இதில் உள்ள நார்ப்பொருட்களால் கொழுப்பு கரைந்து,மலச்சிக்கல் நீங்கும். இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.

வீட்டில் மலச்சிக்கல்,காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிப்பட்டால்,பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.இளம் வெண்டை பிஞ்சுடன்,சர்க்கரை சேர்த்து சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு எரிச்சல் போன்றவையும் தணியும்.

சர்க்கரை,அனீமியா,ஆஸ்துமா,கொலஸ்ட்ரால்,மலச்சிக்கல்,புற்றுநோய்,நீரிழிவு, வயிற்றுப் புண்,பார்வைக் குறைபாடு என சகல நோய்களுக்கும் மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

பலரும் கொழகொழப்பு தன்மையால் வெண்டைக்காயை உட்கொள்ள விரும்ப மாட்டார்கள்.ஆனால் அத்தனை மருத்துவ பயன்களும் அதன் கொழகொழப்பு தன்மையில்தான் நிறைந்து இருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலமும்,கொலஸ்ட்ராலின் அளவையும் கட்டுப்படுத்த வெண்டைக்காய் உதவி செய்கிறது.

அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி,இருமல் வருவதை தடுக்கிறது.

வெண்டைக்காயின் பயன்கள்

  • இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.
  • முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல்,ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து,மறக்காமல் மூடிவைக்க வேண்டும்.
  • பின் காலையில் எழுந்து,அந்த துண்டுகளை நீக்கி,அந்த நீரை குடித்து வர வேண்டும்.
  • இதனை தினமும் காலையில் குடித்து வந்தால்,இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
  • சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான்,மிகவும் சிறந்தது
  • ஆகவே வெண்டைக்காயை குழம்பு,பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து,இது போன்று சாப்பிட்டு வந்தால் நீரிழிவைக் கட்டுப்படுத்தி விடலாம்.

Most Popular

ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ள தகவல் இன்று வெளிவந்துள்ளது. அவரது வருமான வரி செலுத்தும் முறைமையூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆட்சி அமைத்த காலத்திலிருந்து சீனாவுக்கு...

Bank account for Trump in China !!!

US President Donald Trump has a bank account in China released today. According to international reports, the matter came to light through his income tax...

Three jailed in Batticaloa!

Three persons involved in child abuse have been sentenced to life imprisonment in Batticaloa today. Judge M.Y.M.Issadeen has sentenced a man (64) to 09 years...

மட்டக்களப்பில் மூவருக்கு கடூழிய சிறை!

இன்று மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மட்டக்களப்பு, பனிக்கையடி பிரதேசத்தில் 06 வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு(வயது 64) 09 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு...

Recent Comments