28.6 C
Jaffna
Sunday, September 6, 2020
Home News அமெரிக்காவில் சீன தூதரகத்தில் திடீர் தீ விபத்து!

அமெரிக்காவில் சீன தூதரகத்தில் திடீர் தீ விபத்து!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகம் திடீர் தீ விபத்து நேரிட்டது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகம் சர்வதேச சட்ட விதிகளை மீறியதாக கூறி அந்த தூதரகத்தை உடனடியாக மூட டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டதாக சீனா கூறியது.

மேலும் இது மூர்க்கத்தனமான மற்றும் நியாயப்படுத்த முடியாத நடவடிக்கை எனக்கூறி சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.எனினும் அமெரிக்கா உடனடியாக இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே சீனா இந்த தகவலை வெளியிட்ட சில மணி நேரத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீர் தீ விபத்து நேரிட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

எனினும் தூதரகத்தில் இருந்த பல முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments