28.6 C
Jaffna
Sunday, September 6, 2020
Home Sports Outdoor அதிவேக சதமடித்த இந்திய வீரர்கள்!

அதிவேக சதமடித்த இந்திய வீரர்கள்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்த 5 இந்திய வீரர்கள் குறித்த பட்டியலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பலநூறு சர்வதேச சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.அப்படி அடிக்கப்பட்ட சதங்களில் அதிகபட்ச சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் மற்றும் கோலி முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். இப்படி இருக்கும் இந்த பட்டியலில் அதிவேக சதமடித்த இந்தியவீரர்களை காண்போம்.

விராட்கோலி இந்திய அணியின் கேப்டன் ஆவதற்கு முன்பு மிகவும் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார்.2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய அவர் 52 பந்துகளில் சதம் விளாசினார்.இந்த போட்டியில் இந்திய அணி 360 ரன்களை அடித்து வெற்றி பெற வேண்டியிருந்தது. விராட் கோலி சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

வீரேந்தர் சேவாக் 2009ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாமில்டன் மைதானத்தில் அடித்து பட்டையை கிளப்பினார்.இந்த போட்டியில் இவர் 60 பந்துகளில் சதம் விளாசி இருந்தார்.இதன்மூலம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் மேலும் ஒரு சதத்தை தனக்குள் வைத்திருக்கிறார் விராட்கோலி .52 பந்துகளில் சதமடித்து 14 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6 ஆவது போட்டியில் இந்த சதம் வந்தது.இந்த போட்டியிலும் இந்திய அணி 300 ரன்களுக்கும் மேலாக அடித்து வெற்றி பெற வேண்டியிருந்தது இதன் காரணமாக 61 பந்துகளில் சதம் விளாசினார் விராட் கோலி.

ஒருநாள் போட்டியில் அதிவேக சதமடித்த 5 இந்திய வீரர்கள்

யுவராஜ் சிங் ராஜ்கோட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 61 பந்துகளில் ருத்ர தாண்டவம் ஆடினார்.இதன்மூலம் இந்த பட்டியலில் 61 பந்துகளில் 100 ரன் அடித்து 4- வது இடத்தை பிடித்துள்ளார்.

முகமது அசாருதீன் 1997ஆம் ஆண்டு பரோடா மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 62 பந்துகளில் சதம் விளாசினார்.இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆகவும் இருந்தார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments