28.8 C
Jaffna
Monday, September 21, 2020
Home News வட கொரிய அதிபர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!

வட கொரிய அதிபர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!

வடகொரியாவிற்குள் நடக்கும் அத்தனை விவகாரங்களும் மர்மமாகவே இருந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் திணறிக் கொண்டிருக்க,அந்நாடு ஏவுகணைச் சோதனைகளை கூட நடத்தியிருந்தது.

அந்நாட்டுக்குள் கொரோனா தாக்கம் இல்லை என்கிற தகவல் வெளியாகியிருந்தன. எனினும் வடகொரியா திட்டமிட்டே கொரோனா விஷயத்தை மறைத்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

இந்தநிலையில்,வடகொரியாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் கிம் ஜாங்க உன் உயராதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாகவும், கொரோனா தொற்று பரவால் தடுக்க கேஸாங் நகரில் முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

North Korea's Kim says missile tests 'warning' to South Korea, US ...

கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்ட நபர் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும்,இது ஒரு ஆபத்தான சூழ்நிலை.இது பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று அந்நாட்டுசெய்தி ஊடகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் கொரியாவில் தற்போது ஒரு நாளைக்கு 40 முதல் 60 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி,பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments