28.5 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News கொரோனாவால் மக்களின் நம்பிக்கையை இழந்த உலக நாடுகள்!

கொரோனாவால் மக்களின் நம்பிக்கையை இழந்த உலக நாடுகள்!

உலக நாடுகளின் அரசுகள் கொரோனா விவகாரத்தில் மக்களின் நம்பிக்கையை பெருமளவு இழந்து வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கும் பரவியுள்ளது.உலகம் முழுவதும் இதுவரை 1 கோடியே 59 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில்,கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும்,வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையிலும் உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனாலும்,வைரசின் தாக்கும்,அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக நாடுகளின் அரசுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை பெருமளவு இழந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து உலகின் பணக்கார நாடுகளில் சிலவான அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி, இங்கிலாந்து,ஜப்பான்,ஸ்வீடன் ஆகியவற்றில் கிட்ஸ்ட் சிஎன்சி கம்யூனிகேஷன் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

நாடு ஒன்றுக்கு சராசரியாக 1,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அரசுகளின் நம்பிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments