28.8 C
Jaffna
Monday, September 21, 2020
Home Sports Outdoor டோனி தொடர்ந்து விளையாட வேண்டும்!

டோனி தொடர்ந்து விளையாட வேண்டும்!

நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் டோனி இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வயது என்பது வெறும் நம்பர் தான்.நீங்கள் நல்ல பார்முடன் இருந்தாலோ, உண்மையிலே பந்தை நன்றாக அடித்து ஆடினாலோ தொடர்ந்து விளையாடலாம்.

இதே போல் டோனி பந்தை நன்கு அடித்து ஆடினாலோ,சிறப்பான பார்மில் இருந்தாலோ,ஆட்டத்தை அனுபவித்து ஆடினாலோ மற்றும் தன்னுடைய பேட்டிங் வரிசையில் களமிறங்கி இன்னும் தன்னால் இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்க முடியும் என்று நினைத்தாலோ அவர் தொடந்து இந்திய அணிக்காக விளையாடலாம்.

வலுவான உடல் தகுதியுடனும்,நல்ல ஆட்டத்திறனுடனும் இருந்தால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும்.ஏனெனில் யாரும்,யாரையும் ஓய்வு பெறச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது.

வயதை காரணம் காட்டி டோனி போன்றவர்களுக்கு பல நிபுணர்கள் நிறைய நெருக்கடி அளிக்கலாம்.ஆனாலும் ஓய்வு என்பது தனிப்பட்டவர்களின் முடிவாகும்.

கிரிக்கெட்டை எப்போது விளையாட தொடங்குகிறீர்கள் என்பதும்,அதில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் என்பதும் உங்களுடைய தனிப்பட்ட முடிவாகும்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்.போட்டி முந்தைய எல்லா போட்டிகளையும் விட பெரியதாகும்.ஏனெனில் இந்த போட்டி தேசத்துக்கானது என்று கருதுகிறேன்.போட்டி எங்கு நடக்கிறது.எந்த அணி வெற்றி பெறப்போகிறது.யார் அதிக ரன்கள் குவிக்கிறார். யார் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துகிறார் என்பது பெரிய விஷயமல்ல.

ஐக்கிய அரபு அமீரகம் எந்த வடிவிலான போட்டியையும் நடத்துவதற்கு சிறப்பானதொரு இடமாகும்.கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் நடக்க உள்ள இந்த ஐ.பி.எல். போட்டி தேசத்தின் மனநிலையை மாற்றப் போகிறது என்பது தான் மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு கம்பீர் கூறினார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments