28.5 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும்!

அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும்!

அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும்,அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும்,அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு  முடிவுகளில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார்.ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது.

2016 தேர்தலுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது டொனால்டு டிரம்பின் பிரச்சாரத்தில் மேலும் உற்சாகம் இருப்பதாக குடியரசுக் கட்சி தங்களது டுவிட்டரில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளது.ஆனால் மறுபுறம் ஜனநாயக கட்சி வேட்பாளர்,ஜோ பிடென் பிரச்சாரத்தில் குறிப்பிடும்படியான உற்சாகத்தை உருவாக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடந்த பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில்,டிரம்ப் தனது எதிராளியான ஹிலாரி கிளிண்டனுக்குப் பின்னால் இருந்தார்.ஆனால் பின்னர் வெற்றி பெற்றார் என்பதையும் அந்த அணி சுட்டிக்காட்டுகிறது.

புளோரிடா,அரிசோனா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று சவால் மிகுந்த மாகாணங்களில் பிடென் முந்தியிருப்பதாக சிஎன்என் ஞாயிற்றுக்கிழமை ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.ஆனால் டிரம்ப் இந்த மூன்று மாகாணங்களையும் 2016 ல் வென்றிருந்தார்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments