27.7 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Cinema தரகர்களிடம் ஏமாந்த முன்னணி நடிகைகள்!

தரகர்களிடம் ஏமாந்த முன்னணி நடிகைகள்!

நடிகைகள் நயன்தாராவும்,ரம்யா கிருஷ்ணனும்,கோடிக்கணக்கில் நிலம் வாங்கி ஏமாந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி நில வணிக நிறுவனம் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி நீர் ஆதாரம் கொண்ட புறம்போக்கு நிலத்தை நடிகைகள் நயன்தாரா,ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.

விவசாயிகளிடமிருந்த புறம்போக்கு நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மட்டுமே வாங்கி,அதனை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு பிரபலங்களிடம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் நடிகை நயன்தாரா,ரம்யா கிருஷ்ணன்,அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏக்கர் கணக்கில் இந்த நிலத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த நிலத்தில் எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ள முடியாது என்றும் அவை நீர் ஆதாரம் கொண்ட புறம்போக்கு நிலம் என்றும் தெரிய வந்துள்ளதால் இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை செய்து அந்த குறிப்பிட்ட நில வணிக நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்களாம்.

தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரம்,அந்த நில வணிக நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments