28.7 C
Jaffna
Friday, September 18, 2020
Home News சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்!

சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்!

ஆஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் அவர்களை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர்.பெரும்பாலும் சீன மாணவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

சீனாவின் போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல மாணவர்களை இந்த கும்பல் போனில் தொடர்பு கொள்ளும்.பிறகு நீங்கள் சீனாவில் குற்றமிழைத்து விட்டு இங்கே தப்பி வந்துள்ளீர்கள்;உங்களை மீண்டும் நாடு கடத்தப் போகிறோம் என்று கூறி அந்த மாணவர்களை மிரட்டுவார்கள்.

இதனால்,பயந்து போகும் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வர சொல்லும் அந்த கும்பல் அவர்களை காரில் கடத்தி சென்று ஏதாவது ஒரு  அறையில் அடைத்து வைத்து விடும்.

கடத்தப்பட்ட மாணவர்களை அரை நிர்வாணமாக்கி கயிற்றில் கட்டிப் போட்டு மாணவரின் செல்போனிலேயே அந்த காட்சியை  வீடியோவாக இந்த கும்பல் பதிவு செய்யும்.

பிறகு,அந்த வீடியோவை சீனாவில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடத்தப்பட்டவரின்  செல்போனிலிருந்தே அனுப்பி வைக்க கூறுவார்கள்.பிறகு இரு நாள்களுக்கு கடத்தப்பட்டரின் செல்போனை இந்த கும்பல் ஆப் செய்து வைத்து விடும்.

இதனால்,தங்கள் பிள்ளைகளுக்கு என்னவோ… ஏதோவென்று பெற்றோர்கள் பயந்து போவார்கள்.இரு நாள்களுக்கு பிறகு,கடத்தல் கும்பல் மீண்டும் மாணவனின் செல்போனில் இருந்தே பெற்றோரை தொடர்பு கொண்டு இவ்வளவு பணம் கொடுத்தால் விட்டுவிடுவோம் என்று மிரட்டுவார்கள்.

இந்தச் சூழலில் கேட்கும் பணத்தை கொடுக்க மாணவர்களின் குடும்பத்தினர் தயாராக இருப்பார்கள்.இப்படி,சீன மாணவர்களை 8 பேரை கடத்திய மர்மக்கும்பல் இந்த ஆண்டில் மட்டும் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை கறந்துள்ளது.

சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்
இதையடுத்து,சிட்னியில் படித்து வரும் சீன மாணவர்கள் கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அந்த நகர போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.போனில் உங்களுக்கு ஏதோவது மிரட்டல் வந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டுமென்று சீன மாணவர்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments