28.2 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Sports Outdoor டெஸ்ட் போட்டியின் ஏற்றத்தாழ்வு குறித்து அஸ்வின் முறைப்பாடு!

டெஸ்ட் போட்டியின் ஏற்றத்தாழ்வு குறித்து அஸ்வின் முறைப்பாடு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவேன் அல்லது அணியில் இருந்து நீக்கப்படுவேன் என்று டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வு குறித்து அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டி அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அனில் கும்ப்ளே.அவருக்குப்பின் ஹர்பஜன் சிங் சிறந்த ஸ்பின்னராக விளங்கினார்.அவரை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

அதிவேகமாக விக்கெட்டுக்கள் வீழ்த்தி பல சாதனைகள் படைத்துள்ளார்.இந்திய மண்ணில் ஜாம்பவானாக திகழும் அஸ்வின்,வெளிநாட்டு மண்ணில் சற்று தடுமாகிறார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவேன் அல்லது அணியில் இருந்து நீக்கப்படுவேன்.இந்த இரண்டில் ஒன்றுதான் நடந்துள்ளது என்று டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வு குறித்து அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘அணியில் இருந்து நீக்கப்படும்போது மனச்சோர்வும், ஏமாற்றமும் ஏற்படும்.ஆனால்,விளையாட்டில் இது ஒரு அங்கம்.

அதற்கு நல்ல எடுத்துக்காட்டு தற்போது ஸ்டூவர்ட் பிராட் அணியில் இருந்து நீக்கப்பட்டது.முதல் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.அதன்பிறகு 2-வது போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நானும் இதேபோன்ற சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளேன்.ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவேன்,அல்லது அணியில் இருந்து நீக்கப்படுவேன்.ஆனால் எதிர்மறை எண்ணம் என் மனதிற்குள் காலூன்ற நான் அனுமதிக்கவில்லை’’ என்றார்..

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments