27 C
Jaffna
Thursday, October 29, 2020
Home Technology Apps டெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான வசதி!

டெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான வசதி!

உலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான வசதிகளைக் கொண்ட மற்றுமொரு அப்பிளிக்கேஷனாக டெலிகிராம் காணப்படுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனில் தற்போது புதிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி பயனர்கள் இனி 2GB வரையிலான கோப்புக்களை ஒரே தடவையில் பரிமாறக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ,படங்கள் மற்றும் ஆடியோக்கள் உட்பட மேலும் பல வகையான கோப்புக்களை இவ்வாறு பகிர்ந்துகொள்ள முடியும்.இவ் வசதிகளைப் பெறுவதற்காக டெலிகிராம் 6.3.0 எனும் புதிய பதிப்பினை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

மேலும் அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் இப் புதிய பதிப்பினை நிறுவிக்கொள்ள முடியும்.இதேவேளை இதற்கு முன்னர் 1.5GB வரையிலான கோப்புக்களை மாத்திரமே பகிரக்கூடியதாக காணப்பட்டது.

அதேபோன்று வாட்ஸ் ஆப்பில் இன்றுவரை 16MB வரையிலான கோப்புக்களையே ஒரே தடவையில் அதிகபட்சமாக பகிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ள தகவல் இன்று வெளிவந்துள்ளது. அவரது வருமான வரி செலுத்தும் முறைமையூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆட்சி அமைத்த காலத்திலிருந்து சீனாவுக்கு...

Bank account for Trump in China !!!

US President Donald Trump has a bank account in China released today. According to international reports, the matter came to light through his income tax...

Three jailed in Batticaloa!

Three persons involved in child abuse have been sentenced to life imprisonment in Batticaloa today. Judge M.Y.M.Issadeen has sentenced a man (64) to 09 years...

மட்டக்களப்பில் மூவருக்கு கடூழிய சிறை!

இன்று மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மட்டக்களப்பு, பனிக்கையடி பிரதேசத்தில் 06 வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு(வயது 64) 09 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு...

Recent Comments