27.7 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Sports Outdoor அப்பாவான இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்!

அப்பாவான இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்!

ஹர்திக் பாண்ட்யா – செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிச் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.இவர் செர்பியா நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டையொட்டி வெளிநாட்டில் நடுக்கடலில் வைத்து மோதிரம் மாற்றிக்கொண்டு காதலை வெளிப்படுத்தினர்.

அதன்பின் லாக்டவுன் காலத்தில் அவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. புகைப்படம் வெளியானபோதுதான் வெளி உலகத்திற்கு தெரியவந்தது.

கடந்த ஒருமாதமாக தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளங்களில் ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் 3.45 மணியளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments