28.5 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home News செவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணத்தில் அமெரிக்கா!

செவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணத்தில் அமெரிக்கா!

செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா விண்கலம் ரோவர் வெற்றிகரமாக ஏவப்பட்டது.அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது.

ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் அமெரிக்காவின் நாசா விண்கலம் விண்ணில் பாய்ந்தது.செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா,பெயரிட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் மூலம் விடாமுயற்சி எனப் பெயரிடப்பட்ட விண்கலம் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் விண்ணில் ஏவப்பட்டது.

7 மாத பயணத்திற்குப் பிறகு பிப்ரவரியில் செவ்வாயில் தரையிறங்கும் விண்கலத்தில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கோளின் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு உட்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பெர்சிசவரன்ஸ்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் வரை தங்கி ஆய்வுகளில் ஈடுபடும்.

செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியைப் பொறுத்தவரை 687 நாட்களாகும். இந்த விண்கலம்,செவ்வாய் கிரகத்தின் பழைமையான தன்மை குறித்தும்,செவ்வாயில் மனிதன் வாழ்வதன் சாத்தியக்கூறுகள் பற்றியும் தரவுகளை சேகரிப்பதோடு மட்டும் அல்லாமல்,அங்கிருந்து,பாறை மற்றும் மண் ஆகியவற்றின் மாதிரிகளையும் கொண்டுவரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த விண்கலத்துடன் துளையிடும் இயந்திரம், 23 அதிநவீன கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோபோன்கள் சேர்க்கப்பட்டுள்ளது.இது  செவ்வாய்க் கோளைக் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற உதவும்.

செவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணத்தில் அமெரிக்காவின் நாசா ரோவர் விண்கலம்

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments