28.2 C
Jaffna
Friday, October 23, 2020
Home News Asia பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா பரவல்!

பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா பரவல்!

பிரித்தானியாவின் வடக்கு பகுதியில் கொரோனா பரவல் மீண்டும் துவங்கி இருப்பதால், ஊரடங்கு தளர்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.46-ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரித்தானியாவும் உள்ளது.சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவது போன்று தெரிந்தாலும்,நாட்டின் ஒரு சில பகுதிகளில் நோயின் தீவிரம் அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் போரிஸ் ஜோன்சன்,மக்கள் அதிகம் கூடக் கூடிய வாய்ப்புள்ள கேசினோஸ்,ஸ்கேட்டிங் போன்ற விஷயங்களுக்கு தடை நீட்டிக்கப்பட வேண்டும்.

ஊரடங்கு தளர்வு என்பது சூழ்நிலையைப் பொறுத்து தான் முடிவு செய்ய முடியும். தளர்வுகளுக்கு தடை போட தயங்கக் கூடாது.

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாம்அலை வீசுகிறது. கொரொனா பாதிப்புகளை மீண்டும் கூட்ட பிரித்தானியா அனுமதிக்காது என்று கூறியுள்ளார்.

மேலும்,நாட்டின் சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக்ம் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்க வேண்டும்.ஏனென்றால் மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் உள்ளனர்.

ஊரடங்கு நீட்டிப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது.ஆனால் ஐரோப்பிய மக்களின் நன்மைக்காக இதை செய்ய வேண்டியது உள்ளது.பிரித்தானியாவில் கொரோனா இரண்டாம் அலை வீசுவது புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உறுதியாவதாக கூறியுள்ளார்.

Most Popular

ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ள தகவல் இன்று வெளிவந்துள்ளது. அவரது வருமான வரி செலுத்தும் முறைமையூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆட்சி அமைத்த காலத்திலிருந்து சீனாவுக்கு...

Bank account for Trump in China !!!

US President Donald Trump has a bank account in China released today. According to international reports, the matter came to light through his income tax...

Three jailed in Batticaloa!

Three persons involved in child abuse have been sentenced to life imprisonment in Batticaloa today. Judge M.Y.M.Issadeen has sentenced a man (64) to 09 years...

மட்டக்களப்பில் மூவருக்கு கடூழிய சிறை!

இன்று மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மட்டக்களப்பு, பனிக்கையடி பிரதேசத்தில் 06 வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு(வயது 64) 09 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு...

Recent Comments