27.7 C
Jaffna
Sunday, August 9, 2020
Home News ஜப்பான மக்களிடையே தோன்றியுள்ள அச்சமான நிலை!

ஜப்பான மக்களிடையே தோன்றியுள்ள அச்சமான நிலை!

ஜப்பானில் கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் தொடங்கி,பலர் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் ஜப்பான மக்களிடையே அச்சமான நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானில் கொரோனா காரணமாக அமுலில் இருந்த அவசர நிலை நீக்கப்பட்ட பின்னரே, அந்நாட்டின் தென் பகுதியில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃபுகுயோகா தீவின் கிடாக்கியுஷு நகரத்தில் கடந்த சில நாட்களில் 22 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு தொற்றை கட்டுப்படுத்த,ஜப்பான் அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது.

சமீபத்தில் ஜப்பான் பிரதமர் தேசிய அவசர நிலையை நீக்கினார்.அதைத் தொடர்ந்து பல மாநில ஆளுநர்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தினர்.

கொரோனா தாக்கம் குறைந்ததால் அங்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு பொது இடங்கள் திறக்கப்பட்டன.மக்களும் மாஸ்க் அணிந்தபடி தங்கள் அன்றாட வேலையில் மூழ்கத் தொடங்கினர்.

கொரோனா வைரஸ் பொதுவாக நாள்பட்ட நோய்த்தாக்கம் கொண்ட முதியவர்களையே அதிகமாகத் தாக்குகிறது. ஜப்பானில் தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வயதானவர்கள் உள்ளனர்.

அரசின் அறிவுறுத்தலை மீறி ...

ஜப்பானின் சராசரி இறப்பு வயது 80.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்ந்து முதியவர்களை தாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது.இதனால் மற்ற நாடுகளைவிட ஜப்பான் கொரோனாவை கண்டு அஞ்சுகிறது.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments