27.7 C
Jaffna
Sunday, August 9, 2020
Home Cinema இளையராஜாவின் வாழ்க்கையை புத்தகம் ஆக்கிய பாடலாசிரியர்!

இளையராஜாவின் வாழ்க்கையை புத்தகம் ஆக்கிய பாடலாசிரியர்!

தமிழில் பல படங்களுக்கு பாடல் எழுதி வரும் பாடலாசிரியர் முருகன் மந்திரம், இளையராஜாவை பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

‘விருந்தாளி,சாரல்,சும்மாவே ஆடுவோம்,திருப்பதி லட்டு,பட்டினப்பாக்கம்,உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியவர் பாடலாசிரியர் முருகன் மந்திரம்.இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.மேலும் ‘ஆபரேஷன் அரபைமா’ படத்தின் மூலம் வசன கர்த்தாவாக மாறி இருக்கும் இவர்,தற்போது இளையராஜா பாடல்கள் குறித்து புத்தகம் ஒன்று எழுதியுள்ளார்.

“ஒரே ஒரு ராஜா,ஒரு கோடி கதைகள்” என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த புத்தகம் வாசிப்பவர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக வாசித்தவர்கள் கூறுகின்றனர். இளையராஜா,இளையராஜாவின் இசை,பாடல்கள் குறித்து நிறைய புத்தகங்கள் வந்திருந்தாலும் இது அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது என்கிறார், பாடலாசிரியர் முருகன் மந்திரம்.இதுபற்றி முருகன் மந்திரம் கூறுகையில்,

“40 ஆண்டு காலமாக தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இளையராஜா இருக்கிறார்.இளையராஜா இல்லாமல் தமிழர் வரலாற்றையோ,தமிழ் இசையின் வரலாற்றையோ எழுத முடியாது.

இளையராஜா உருவான கதையும்,அவரது இசையும் பாடல்களும் உருவானது பற்றியும் நாம் நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம்,ஆனால் இளையராஜா பாடல்கள் நம் வாழ்க்கையில் உருவாக்கிய கதைகளையும்,நம் வாழ்க்கையின் பல கதைகளில் இளையராஜா பாடல்கள் இருந்தததையும் நாம் யாரும் கூறக் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.

0 Reviews

Most Popular

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர்,நவம்பர்...

ஓய்வு தொடர்பில் டோனியின் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கவுள்ளார். களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நடைபெற்று...

Recent Comments