29.7 C
Jaffna
Monday, September 7, 2020
Home Lifestyle Food சுவையான கருவேப்பிலை குழம்பு செய்முறை!

சுவையான கருவேப்பிலை குழம்பு செய்முறை!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உடலுக்கு ஆரோக்கியமான கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • காய்ந்த மிளகாய் – 2
  • வெங்காயம் – 1/4 கப் பொடிதாக நறுக்கியது
  • பூண்டு – 10 பற்கள் பொடிதாக நறுக்கியது
  • கருவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • பெருங்காயம் தூள் – ஒருஸ்பூன்
  • குழம்பு மசாலா தூள் – 3 ஸ்பூன்
  • தக்காளி – ஒன்று பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள்
  • புளி தண்ணீர் – ஒரு கப்
  • சுண்ட வத்தல் – 5
  • தேங்காய் துருவல் – இரண்டு ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கடுகு – ஒரு ஸ்பூன்
  • சீரகம் – ஒரு சிட்டிகை

செய்முறை:

  • முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள் எண்ணெய் நன்கு சூடேறியதும்,அவற்றில் ஒரு கைப்பிடியளவு கருவேப்பிலையை சேர்த்து நன்றாக பொரித்ததெடுக்கவும்.
  • பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், அவற்றில் ஐந்து சுண்ட வத்தலை பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இப்பொழுது ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள்,அவற்றில் பொரித்த கருவேப்பிலை,சுண்ட வத்தல்,இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மைபோல் அரைத்து கொள்ளுங்கள்.
  • பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள்,எண்ணெய் சூடேறியதும் இரண்டு காய்ந்த மிளகாய்,கடுகு ஒரு ஸ்பூன் மற்றும் சீரகம் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக பொரியவிடுங்கள்.
  • பிறகு ஒரு கைப்பிடியளவு பொடிதாக நறுக்கிய வெங்காயம்,பொடிதாக நறுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்,பின் ஒரு ஸ்பூன் பெருங்காயம் தூள் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு மூன்று ஸ்பூன் குழம்பு மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் நன்கு பேஸ்ட்டு போல் அரைத்த தக்காளி விழுதினை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.அதாவது எண்ணெய் நன்கு பிரிந்து வரும் அளவிற்கு நன்கு வதக்க வேண்டும்.
  • பின் 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி கொதிக்கவிடுங்கள்,பின் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை விழுதினை இவற்றில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  • குழம்பு நன்கு கொதித்ததும் ஒரு கப் புளி தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறிவிடுங்கள்,பின் மூடி போடு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.
  • இப்பொழுது சுவையான மற்றும் ஆரோக்கியமான கருவேப்பிலை குழம்பு தயார், ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments