28.1 C
Jaffna
Sunday, September 13, 2020
Home Sports Indoor ஐபிஎல் 2020 போட்டிகள் நடைபெறும் திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஐபிஎல் 2020 போட்டிகள் நடைபெறும் திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ஆம் திகதி வரை தொடர் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

அதன் படி, செப்டம்பர் 19-ஆம் திகதி முதல் நவம்பர் 10-ஆம் திகதி வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2-ஆம் திகதி ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு நடைபெற்றது.கூட்டத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும்,போட்டி செப்டம்பர் 19-ஆம் திகதி துவங்கி நவம்பர் 10-ஆம் திகதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,வரும் 26-ஆம் திகதி இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படுவார்கள், போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments