28.1 C
Jaffna
Sunday, September 13, 2020
Home News சுவிட்சர்லாந்து கண்டிப்பாக இதை செய்தாக வேண்டும்! எச்சரித்த முக்கிய நபர்

சுவிட்சர்லாந்து கண்டிப்பாக இதை செய்தாக வேண்டும்! எச்சரித்த முக்கிய நபர்

விட்சர்லாந்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை அராசங்கம் கடுமையாக்க வேண்டும் என்று நாட்டின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் புதிய தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கை சமீபத்தில் சுவிட்சர்லாந்து நீக்கியது, இதைத் தொடரந்து நாட்டில் புதிய கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 200-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

இந்நிலையில், எதிர்காலத்தில் மிகவும் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளின் தேவையைத் தடுக்க, நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வழக்குகளை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று சுவிஸ் அரசாங்கத்திற்கு விஞ்ஞான ஆலோசனைகளை வழங்கும் அமைப்பின் தலைவரான மார்ட்டின் அக்கர்மன் கூறினார்.

நாடு தொற்றுநோய்களின் அதிகரிப்பு விளிம்பில் இருப்பதாகவும்,கொரோனாவின் அதிவேக வளர்ச்சியைத் தடுக்க நாம் ஆரம்பத்தில் தலையிட வேண்டும், இல்லையெனில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய ஆபத்து உள்ளது என்று அக்கர்மன் தெரிவித்தார்.

வீட்டிற்குள் முகக்கசவம் அணிவது கட்டாயமாக்கப்படுவதை ஆதரிப்பதாக அக்கர்மன் கூறினார்.ஆனால்,சுவிஸில் முகக்கவசம் தற்போது பொது போக்குவரத்து மற்றும் அரசியல் ஆர்ப்பாட்டங்களில் மட்டுமே கட்டாயமாக உள்ளன.

சுவிஸில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு இன்னும் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்,கூட்டங்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் அளவை மீண்டும் குறைக்க வேண்டும் என்று நுண்ணுயிரியலில் நிபுணரான அக்கர்மன் கூறினார்.

பொது நிகழ்வுகளின் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்,ஏனெனில் வழக்குகளின் எண்ணிக்கையில் அதிவேகமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் இடத்தில்,பல தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளன என்பதைக் ஆரம்ப தரவு காட்டுகிறது என்று அவர் கூறினார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments