28 C
Jaffna
Friday, September 25, 2020
Home News தேர்தல் ஒத்திவைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா!

தேர்தல் ஒத்திவைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா!

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் செப்டம்பர் மாதம் 6ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருந்தது.

சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பிறகு வரும் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்த தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சிகளின் கை ஓங்கும் என்றும் சீன ஆதரவு கட்சிகள் பின்னடைவை சந்திக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடக்க இருந்த இந்த தேர்தலை ஒரு ஆண்டுக்கு அதாவது அடுத்த ஆண்டு செப்டம்பர் 5ந் தேதிக்கு ஒத்திவைத்து ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் இந்த வார தொடக்கத்தில் உத்தரவு பிறப்பித்தார்.இது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

செப்டம்பர் 6ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த சட்டசபை தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஹாங்காங் அரசின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments