28.1 C
Jaffna
Sunday, September 13, 2020
Home News பசிபிக் கடல் மணலில் எழுதப்பட்ட ராட்சத எழுத்து!

பசிபிக் கடல் மணலில் எழுதப்பட்ட ராட்சத எழுத்து!

பசிபிக் கடலில் சிக்கித்தவித்த மூன்று மாலுமிகளை, மணலில் எழுதிய ராட்சத எழுத்தை வைத்து கண்டுபிடித்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பசிபிக் கடலில் உள்ள மைக்ரோனேசியா கூட்டாச்சியில் உள்ள புலாப் அட்டோல்ஸ் தீவுக்கு புலாவத்தில் இருந்து மூன்று மாலுமிகள் 23 அடி நீளம் உள்ள படகு மூலம் சென்றனர்.இரு தீவுகளுக்கும் இடையில் உள்ள தூரம் 42 கி.மீட்டர்.

ஆனால் மாலுமிகள் சென்று கொண்டிருந்தபோது, எரிபொருள் காலியாகியதால் அவர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத மைக்லாட் என்ற சிறிய தீவில் கரை ஒதுங்கினர்.

அங்கிருந்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் படகை கரையில் ஏற்றி வைத்தனர். அதன்பின் மணலில் ‘SOS’ என ராட்சத வடிவில் எழுதினர்.பின்னர் யாராவது காப்பாற்ற வருவார்களா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடந்த வியாழக்கிழமை அவர்கள் காணாமல் போனார்கள்.புலாப் தீவுக்கு செல்லாதது அறிந்து அமெரிக்க அதிகாரிகள்,ஆஸ்திரேலியா அதிகாரிகளுடன் சேர்ந்து தேட ஆரம்பித்தனர்.திங்கட்கிழமை வரை யாரும் அவர்களை கண்டுபிடிக்கவில்லை. இதனால் சோர்வடைந்து மூன்று பேரும் மயங்கும் நிலை ஏற்பட்டது.

குட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்

அப்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் அந்ததீவு அருகில் வரும்போது திடீரென மழை பெய்தது.

அப்போது அந்த ஹெலிகாப்டர் திரும்பிச் செல்ல முயன்றது. அப்போது அதில் இருந்து அதிகாரி ஒருவர் தீவு மணலில் ஏதோ எழுதியிருப்பதை கண்டார்.

உடனடியாக அருகே இருந்த ஆஸ்திரேலியாவின் கப்பற்படை விமானத்தை தொடர்பு கொண்ட அந்த தீவில் இறங்கு தேடும்படி கேட்டுக்கொண்டனர்.

அவர்களும் அந்த தீவில் இறங்கி பார்க்கும்போது அந்த மூன்று பேரும் அங்கு இருந்ததை கண்டுபிடித்து,அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

நாம் கடற்கரையில் வேடிக்கையாக மணலில் எழுதி விளையாடுவோம்.அந்த வகையில் எழுதிய எழுத்து மூன்று பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments