29.7 C
Jaffna
Monday, September 7, 2020
Home Spiritual Culture வீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

வீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

மாலையில் நாம் செய்யும் சில செயல்கள் தான் நம் வீட்டில் பணம் தங்காமல் போவதற்கு முக்கிய காரணமாம்.எனவே அவை என்ன என தெரிந்து கொண்டு இனிமேல் அதை பின்பற்றுவதைத் தவிர்த்திடுங்கள்.

துளசியைத் தொழுவது

சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசியை தொழுவது அல்லது தொடுவது தடை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு செய்தால் அந்த வீட்டில் துரதிர்ஷ்டம் வருவதோடு, வறுமை நீங்காமல் இருக்கும்.

அதுவே துளசியை அதிகாலையில் நீர் ஊற்றி,நெய் விளக்கேற்றி தொழுது வந்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி,லட்சுமி தேவி குளிர்ச்சியடைந்து, செல்வத்தை ஈர்க்கச் செய்வாள்.

வீட்டைப் பெருக்குவது

சூரிய அஸ்தமனத்திற்கு பின்,வீட்டைப் பெருக்குவது என்பது கெட்ட சகுணமாக கருதப்படுகிறது.சாஸ்திரத்தின் படி,இப்படி வீட்டைப் பெருக்கினால் வீட்டில் உள்ள அனைத்து சந்தோஷம் மற்றும் அதிர்ஷ்டத்தை வெளியேற்றுவதற்கு சமமாகும்.

இல்லறம்

மாலை வேளையில் இல்லறத்தில் ஈடுபடுவது நல்லதல்ல என சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில்,இந்த நேரத்தில் இல்லறத்தில் ஈடுபட்டால்,அது துரதிர்ஷ்டத்தை ஈர்க்குமாம்.

படிப்பது

மாலையில் சூரிய அஸ்தனத்தின் போது படிப்பது,லட்சுமி தேவியின் கோபத்தை தான் ஈர்க்கும்.ஆகவே மாலையில் ஒரே இடத்தில் அமர்த்து படிப்பதை விட்டு,விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

அசுத்தமான சுற்றுச்சூழல்

வீடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பகுதியை அசுத்தமாக வைத்துக் கொண்டால் அது லட்சுமி தேவியை கோபப்படுத்துவதாகவும் சாஸ்திரங்கள் கூறுகிறது.எனவே வீட்டில் செல்வம் கொழிக்க வீட்டையும்,சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

தூங்குவது

சூரிய அஸ்தமனத்திற்கு பின் தூங்கினால் துரதிர்ஷ்டம் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் ஈர்க்கப்படும்.அதுமட்டுமின்றி இந்நேரத்தில் தூங்கினால்,உடல் பருமன் மற்றும் இதர உடல்நல கோளாறுகளால் அவஸ்தைப்படக்கூடும்.

பாத்திரங்களை கழுவுவது

உணவு உட்கொண்ட பின்னர்,பாத்திரங்களை அப்போதே சுத்தம் செய்யாவிட்டால், அதனால் சனி மற்றும் சந்திரனின் கெட்ட செல்வாக்கை பெற நேரிடும்.உணவு உண்ட உடனேயே பாத்திரத்தை சுத்தம் செய்தால் லட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்பை அளிப்பார்.

 

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments