28.1 C
Jaffna
Sunday, September 13, 2020
Home News World அமெரிக்க புலனாய்வுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்க புலனாய்வுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்க தேர்தலில் சீனா,ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை கூறி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது.இத்தேர்தலில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பிற்கும்,முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதியும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்கு செலுத்த விரும்பும் நாடுகளில் சீனா,ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் உள்ளன என்று அமெரிக்க உயர் உளவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க புலனாய்வுத்துறை (என்.சி.எஸ்.சி) தலைவர் வில்லியம் இவானினா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வெளிநாடுகள் மாநிலங்களில் வாக்களிப்பைத் தடுக்க ரகசிய மற்றும் வெளிப்படையான செல்வாக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற சீனா விரும்பவில்லை என்றும்,ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடனை காயப்படுத்த ரஷ்யா விரும்புகிறது என கூறி உள்ளது.

வெளிநாடுகள் வாக்காளர் விருப்பங்களைத் திசைதிருப்பவும், அமெரிக்க கொள்கைகளை மாற்றவும்,”நாட்டில் கருத்து வேறுபாட்டை அதிகரிக்கவும்” முயற்சிக்கின்றன.மேலும் நமது ஜனநாயக வழிமுறையில் அமெரிக்க மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.

எவ்வாறாயினும்,நமது எதிரிகளுக்கு வாக்களிப்பு முடிவுகளில் தலையிடுவது அல்லது கையாளுவது கடினம் என்று கூறி உள்ளார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments