28.2 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Lifestyle Food எளிமையான முறையில் செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி?

எளிமையான முறையில் செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ருசியான செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

செய்ய தேவையான பொருட்கள்:

  • கசகசா – 1 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 5
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • தக்காளி – 1 (நறுக்கியது)
  • பூண்டு – 5 பல் (அரைத்தது)
  • தேங்காய் – 1/2 கப் (துருவியது)
  • எண்ணெய் – தேவையான அளவு
  • இறால் – 400 கிராம்
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் இறாலை நன்கு கழுவி,அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர்,மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து,10 நிமிடம் கொதிக்க விட்டு,பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,அதில்கடுகு,மிளகு,சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து,2-3 நிமிடம் வறுக்கவும்.
  • பிறகு சூடு ஆறியதும்,அதனை மிக்ஸியில் போட்டு,சிறிது தண்ணீர் ஊற்றி,நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.
  • பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி,தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.
  • பின் அதனை எடுத்து ஆறியதும்,மிக்ஸியில் வறுத்த தேங்காய்,பச்சை மிளகாய் போட்டு,நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
  • தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து,அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.பின் அதில் தக்காளி,பூண்டு மற்றும் உப்பு சேர்த்து,3-4 நிமிடம் வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும்,அதில் வறுத்து,அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு,3-4 நிமிடம் வேக வைக்கவும்.
  • பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து,1 கப் தண்ணீர் ஊற்றி,வேக வைத்துள்ள இறாலைப் போட்டு,தீயை குறைவில் வைத்து,5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • இப்போது சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!!
  • இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments