28.6 C
Jaffna
Monday, September 28, 2020
Home News நாட்டு மக்களுக்கு பிரித்தானியா பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டு மக்களுக்கு பிரித்தானியா பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் மாதங்கள் கடினமாக இருக்கும் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலையின்மை தொடர்பில் ஓஎன்எஸ் புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டதை தொடர்ந்து பிரித்தனியா பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா ஊரடங்கு தொடக்கத்திலிருந்து 730,000 பேர் வேலை இழந்துள்ளனர் என தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) புதிதாக வெளியிட்டுள்ள தரவுகள் காட்டுகிறது.

பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வேலையின்மை 220,000 அதிகரித்துள்ளது,இது 2009 முதல் பிரித்தானியா வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காலாண்டு வீழ்ச்சியாகும் என ஓஎன்எஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், வேலையை இழக்கும் மக்களுக்கு இது மிகவும் மோசமான நேரமாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும் என்று ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறினார்.

எதிர்வரும் மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும் மற்றும் இவ்வாறே நீண்ட நாட்களை நாம் கடந்து செல்ல வேண்டியிக்கும் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா அரசாங்கம் அதன் மிகப்பெரிய வேலை பாதுகாப்பு திட்டத்தை கைவிடுவதால் கொரோனா வைரஸ் அதிக தொழிலாளர்களின் வேலையை பறிக்கும் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகறிது.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments