28.8 C
Jaffna
Monday, September 21, 2020
Home Cinema சர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா!

சர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தகாத உறவை சித்தரிக்கும் சர்ச்சை கதையில் நடிக்க மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார்.

அவரது படங்கள் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக வசூல் குவிக்கவும் செய்கின்றன. தெலுங்கு,மலையாளத்திலும் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

இந்த நிலையில் ஆயுஷ்மான் குரானா,ராதிகா ஆப்தே,தபு ஆகியோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியானது.

இதில் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அவர் ரூ.4 கோடி சம்பளம் எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமணத்தை மீறி தகாத உறவில் ஈடுபடும் சர்ச்சை கதாபாத்திரம் என்பதால் நடிக்க மறுத்து விட்டதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

நயன்தாரா
நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஊரடங்கு முடிந்ததும் இந்த படம் திரைக்கு வருகிறது. நெற்றிக்கண்,ரஜினியின் அண்ணாத்த,காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments