28.1 C
Jaffna
Sunday, September 13, 2020
Home News இஸ்ரேல் தொடர்பில் ஐக்கிய அமீரகத்தை எச்சரித்த ஈரான்!

இஸ்ரேல் தொடர்பில் ஐக்கிய அமீரகத்தை எச்சரித்த ஈரான்!

இஸ்ரேலுடன் ராஜாங்க உறவுகள் மேற்கொண்டுள்ளதை ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்றுச் சிறப்பானது என்று கொண்டாடும் நிலையில், அபாயகரமான விளைவுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக இருக்க வேண்டும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலுடன் ராஜாங்க உறவு மேற்கொள்ளும் முதல் வளைகுடா அரபு நாடாகும் ஐக்கிய அமீரகம்.மேலும் இஸ்ரேலுடன் உறவு வைத்துக் கொள்ளும் 3வது அரபு நாடாகவும் ஆனது ஐக்கிய அமீரகம்.

இந்த நிலையில் ஈரான் இந்த இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தத்தை ‘வெட்கக் கேடானது” என்றும் “தீமையான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஜாங்க உறவு மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிக்கும் இது அமீரக அரசுக்கே அபாயகரமானதாக முடியும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி அமீரகத்தின் இந்த ஒப்பந்தத்தை கண்டித்துள்ளார்.தொலைக்காட்சியில் அவர் இது தொடர்பாகக் கூறும்போது,

இஸ்ரேலுடன் உறவுகளை சாதாரண இயல்புநிலைக்கு கொண்டு சென்று ஐக்கிய அரபு அமீரகம் பெரிய தவறைச் செய்துள்ளது.

இந்தப் பகுதியில் இஸ்ரேல் காலூன்ற அனுமதிக்கலாமா? என்றார்.ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜவாத் ஜரீப்,இந்த ஒப்பந்தம் அரபு மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான துரோகம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தை கண்டித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கும் போக்குக்கு ஆதரவளிக்கும் முடிவாக இது அமையும் என ஈரான்,ஐக்கிய அரபு அமீரகத்தைச் சாடியுள்ளது.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments