28.5 C
Jaffna
Thursday, September 24, 2020
Home News Asia வட மாகாணத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஆடையகங்கள்,உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறந்த நிலையில் வைத்திருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில்,வடக்கு மாகாண ஆளுநர் சார்லஸ்,பொலிஸார்,இலங்கை போக்குவரத்து சபை,தனியார் பேருந்து ஊழியர்கள்,ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலையங்களை திறந்து வைத்திருப்பதன் மூலம்,வட மாகாணத்தின் இயல்புநிலை பராமரிக்கப்பட்டு வருவதனை தெளிவுப்படுத்துவதற்கும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கே.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் போக்குவரத்து சேவைக்கும் பயணிகளின் அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தற்போது அதிகமான பேருந்து சேவைகள் இரவு 8 மணியளவில் நிறுத்தப்படும் நிலைமையில், இரவு நேரத்தில் சேவையை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments