28.1 C
Jaffna
Sunday, September 13, 2020
Home News என் கணவன் அதற்கு தகுதியானவர் இல்லை!

என் கணவன் அதற்கு தகுதியானவர் இல்லை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டிற்கு ஏற்ற தலைவர் அல்லர் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதில் குடியரசுக் கட்சி சார்பாக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடும் அதேவேளை,ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில்,அமெரிக்க ஜனநாயக கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்ட மிஷெல் ஒபாமா,ஜோ பிடனை ஆதரித்துப் பேசினார். இதன்போதே டொனால்ட் ட்ரம்பை இவ்வாறு விமர்சித்துள்ளார்.

குறித்த மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தனது செயற்பாடுகளை நிரூபிக்க போதுமான கால அவகாசம் இருந்த போதும் அவர் அதனை சரிவர நிறைவேற்றவில்லை.

மேலும், எங்களுக்கானவராக நாம் தேடும் ஓர் நபராக அவரால் இருக்கவே முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனநாயக கட்சியின் மாநாட்டில் மிஷெல் ஒபாமா உரை நிகழ்த்தியமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ‘அவர் அரசியலை வெறுப்பவர்’ இருந்த பொது இந்நிகழ்வின் முதல் நாள் இரவில்,மிகப்பெரிய அரசியல் மற்றும் தனிநபர் சார்ந்த உரையினை மிஷெல் நிகழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

0 Reviews

Most Popular

கர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…?

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...

தைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

நீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...

பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ!

பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...

அரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை!

அரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...

Recent Comments