28.4 C
Jaffna
Tuesday, September 22, 2020
Home Sports Outdoor எம்.எஸ். டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் இடம்!

எம்.எஸ். டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் இடம்!

சச்சின் தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை வான்கடே மைதானத்தில் முடித்ததுபோல்,எம்.எஸ். டோனி சென்னை சேப்பாக்கத்தில் முடிப்பார் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ்.டோனி கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு அறிவித்தார்.

பிசிசிஐ அவருக்கு விடைபெறுதல் போட்டி (Farewell Game) நடத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.அவர் பிசிசிஐ-யிடம் கோரிக்கையும் வைக்கவில்லை.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார்.அவரது கடைசி போட்டி எங்கே நடக்கும் என்பதை விவிஎஸ் லக்‌ஷ்மண் விவரித்துள்ளார்.

எம்எஸ் டோனியின் கடைசி போட்டி குறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறுகையில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி எம்.எஸ் டோனி பேரார்வமாக உள்ளார்.

இதை நாம் அனைவரும் அங்கீகரிக்க வேண்டும்.எம்.எஸ். டோனி தலைமையில் மிகவும் வெற்றிகரமான அணியாக அது இருந்து வருகிறது

அந்த அணி கோப்பையை வெல்ல முடிந்த அளவிற்கு அவர் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.

ஆனால் ரசிகர்களைப் பொருத்தவரை,பரவசம் காணப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.தற்போது வரை அவர் கிரிக்கெட் போட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். சிஎஸ்கே அணியின் கேப்டன் இருக்கிறார்.

எம்.எஸ். டோனி மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுவார்.அவருடைய ஒவ்வொரு நகர்வையும் அவருடைய ரசிகர்கள் ரசிப்பார்கள். கிரிக்கெட் மைதானத்தில் டோனி செலவழிக்கும் தருணத்தை ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

0 Reviews

Most Popular

தேங்காய் கேக் செய்யும் எளிய முறை!

சமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி? பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...

நீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...

இரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா?

மற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்!

பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...

Recent Comments